top of page
Istanbulil Paradesi - Dust Jacket

Istanbulil Paradesi - Dust Jacket

SKU: DJAG151328
₹350.00Price
Sales Tax Included

"இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் முக்கிய இஸ்தான்புல் சுற்றுலாத்தலங்கள்:

உலகப் பாரம்பரியச் சின்னமான நீலப் பள்ளிவாசல்

Blue Mosque @ Sultan Ahmed Mosque

கட்டடக்கலை அதிசயங்கள் நிரம்பிய ஆயா சோபியா

Aya Sofya @ Hagia Sophia

உலகின் மாபெரும் சந்தைகளில் ஒன்றான கிராண்ட் பஜார்

Grand Bazaar of Istanbul

560 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட ருஸ்தம் பாஷா மாஸ்க்

Rustem Pasha Mosque

சுல்தான்கள் கோலோச்சிய டொப்கப்பி அரண்மனை

Topkapi Palace

உலகின் பழம்பெரும் நீர்ச் சேமிப்பிடம் பசிலிக்கா சிஸ்டர்ன்

Basilica Cistern @ Sunken Palace

துருக்கியின் நவீன மாளிகை டோல்மபாச்சே அரண்மனை

Dolmabahce Palace

இயற்கை அழகு கொஞ்சும் கேம்லிகா குன்று

Big Camlica Hill

சுல்தான்களின் கோடைக்கால அரண்மனை பெய்லர்பேயி

Beylerbeyi Palace

ஆயிரம் ஆண்டு பழமையான தங்கக்கொம்புத் துறைமுகம்

Golden Horn, Natural Harbour

இஸ்தான்புல்லின் 2 ஆவது பெரிய சந்தை ஸ்பைஸ் பஜார்

Spice Bazaar @ Egyptian Bazaar

வரலாற்று முக்கியத்துவமிக்க பாஸ்ஃபோரஸ் ஜலசந்தி

Bosphorus Strait

மனதை உருக்கும் கதை கொண்ட மெய்டன் டவர்

Maiden Tower @ Leander’s Tower

முகமது நபியின் பெயர் வடிவிலான ருமேலியன் கோட்டை

Rumelian Castle

இவை தவிர பள்ளிவாசல்களில் அமைக்கப்படும் மினாரேட்டுகளின் பலகணி ரகசியம், கையால் நெய்யப்பட்ட அசல் கம்பளத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப ரகசியம், உலகப் பேரழகிகள் கொலு வீற்றிருந்த துருக்கி அந்தப்புரங்களின் நிர்வாக ரகசியம் என இஸ்தான்புல்லின் பல ருசிகர ரகசியங்கள்...

கான்ஸ்டாண்டினோபிள் நகரம் இஸ்தான்புல் எனப் பெயர் மாறிய கதை, இஸ்லாமிய நாடான துருக்கியில் கிறித்தவம் உருப்பெற்ற வரலாறு, 1500 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமப் பேரரசர்களின் மலைக்க வைக்கும் நீர் மேலாண்மை, உலகையே ஆட்டிப் படைத்த ஆட்டமன் பேரரசின் எழுச்சி - வீழ்ச்சி, உலக வல்லரசுகளை எதிர்த்துத் துருக்கியில் குடியாட்சியை மலர வைத்த முஸ்தஃபா கமால் அவர்களின் மாவீரம் எனப் படிக்கப் படிக்கத் திகட்டாத வரலாற்றுத் தகவல்கள்...

24 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இஸ்தான்புல் கம்பளம், 1600 ஆண்டுகளுக்கு முந்தைய துவக்கப் புள்ளிச் சாலைக் கல் (Zero-mile Marker), 35 கிலோ எடையுள்ள தங்கக் குத்து விளக்கு, நபிகள் நாயகத்தின் புனித மேலாடை மற்றும் வாள், தங்கத்தையே உருக்கி வண்ணம் பூசப்பட்ட துருக்கி அரண்மனை என விழிகளை விரியச் செய்யும் அதிசயத் தகவல்கள்...

அனைத்தையும் பல படங்களுடன் படிக்க, பார்க்க, சுவைக்க வாருங்கள் உள்ளே…"
 

  • Author Name

    Alfred Thiagarajan
  • Terms and Conditions

    All items are non returnable and non refundable
  • Language

    Tamil
bottom of page