top of page
Yathumagi

Yathumagi

SKU: 9789354902321
₹150.00Price
Sales Tax Included

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எத்தனை எத்தனை அவலங்கள்?, ஆச்சரியங்கள்! எதார்த்தங்கள், எதிர்பார்ப்புகள். மாற்றங்கள், ஏமாற்றங்கள். இப்படிப்பட்ட விசித்திரமானவாழ்க்கை யை, நீரில் கலந்து விட்ட குங்குமம் போல நிறம்மாறியும் பிரிக்கமுடியாது இவற்றோடு வாழ்ந்திடும் நிலையில், தான் சார்ந்த சமூகம் தன் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும்,  பல நேரங்களில் இவற்றையெல்லாம் மழையில்  நனைந்துகொண்டு அழுவது போல், பிறர்  அறியாதபடி நிகழ்ந்ததாக நான் கேட்டற்றையும், கண்டவற்றையும், கற்பனை கலந்து எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பே 'யாதுமாகி' எனும் இந்நூல்.

 

இந்நூலிலுள்ள கதைகளைப் படிக்கும் போது சில இடங்களில் கண்ணாடியின் முன் நமது முகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வோ அல்லது இந்த முகம் நமக்குத் தெரிந்த ஒரு முகம் என்ற உணர்வோ ஏற்படலாம். ஆணால்-பெண்ணும். பெண்ணால்-ஆணும், பெண்ணால்பெண்ணும். ஆணால்-ஆணும் குடும்பமும், சமூகமும் அடையும் நன்மை தீமைகளை வெளிப்படுத்தும் வகையில் இச்சிறுகதைத் தொகுப்புநூல் அமைகிறது. மகளிரின் மென்மையையும், அவர்களின் மேன்மையையும் பேசுவதோடு மகளிரின் வலிமையையும்  அவர்களின் இன்றியமையா நிலையையும், பெண்ணியத்தையும்  இத் தொகுப்பிலுள்ள கதைகள்  பேசுகின்றன. கோபுரக்கலசமென  உயர்ந்து நிற்கும்  சில குணங்களையும், பாதாளச் சாக்கடையில் நெளியும் புழுக்களென சில குணங்களையும் இந்நூலிலுள்ள சில கதைகள் குறிப்பிடுகின்றன.

  • Author Name

    Thilagavathi
  • Terms and Conditions

    All items are non returnable and non refundable
bottom of page