Uravu Sangili
ஒரு இல்லத்தரசியின் பார்வையிலிருந்தும் சமூக அக்கறை கொண்ட சாதாரணப் பெண்ணின் சிந்தனையிலிருந்தும் உதித்த வாழ்வியல் சிறுகதைகள் இவை. இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என சிந்திக்க வைத்த கருக்கள்.
வெளிநாட்டுக்குத் தங்கள் பிள்ளைகளை தாரை வார்த்து பாசத்துக்கு ஏங்கும் பெற்றோரின் பிரதிநிதிகளாய் நமக்கு நாமில் கணவருடன் அமுதா எடுக்கும் முடிவு
அலைபேசியை மாற்றத்துக்கு வித் தாக்கலாம் என்றுணர்த்திய கிராமத்து இளம்பெண் செண்பகம்
பிரசவ வலியின் வேதனை உணர்ந்த காதல் கணவனை முத்தமிட்ட பிரியா
கையறு நிலை என்றாலும் மானம் காத்த ஏழைப் பெண் கனகு
உயிரற்ற நிலையிலும் பரிதவிக்கும் தாய்(மை) மாலதி
பாலியல் கொடுமையை சந்தித்த சிறப்புப்பெண்ணான சினேகாவின் தாய் லதாவின் துணிவு
உடல்கள் கலப்பது மட்டுமே தாம்பத்யமல்ல என உணர்ந்து சுயம் காத்த புதுமைப் பெண் நித்யா
கணவன் உறவே ஆயுசு பந்தம் என மகனுக்கு உணர்த்திய சியாமளா
குடும்பக் கடமைகளை விட்டு ஓடிப்போன இல்லத்தரசி செல்வி
தண்டச்சிறுக்கி என கணவன் வசை பாடிய மாலாவின் அடையாளம்
கொரானாக்காலத்தில் கதியற்று நின்றாலும் கலங்காமல் வாழ்வை மாற்றிய சரசு
நாத்தனார் கெடுபிடி யில் சாந்தியின் மகிழ்ச்சி
இப்படி கதைகளின் மாந்தர்கள் அனைவரும் பெண்களே என்றாலும் தனித்துவம் மிக்கவர்கள்.
மனதைக் கவரும் இவர்கள் நம் அக்கம் பக்கம் வசிப்பவர்களே.
நீங்களும் அவர்களுடன் பயணிக்க வாருங்களேன்.
Author Name
Salem SubaTerms and Conditions
All items are non returnable and non refundable