Siripin Micham
'சிரிப்பின் மிச்சம்' எனும் இந்த சிறுகதைத் தொகுப்பில் முகநூலில் வெளியாகி பலர் படித்துப் பாராட்டிய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பல தளங்களைத் தொட்ட சிறுகதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 'சிரிப்பின் மிச்சம்' சிறுகதை பலரும் தங்கள் அனுபவத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடிய எளிய நிகழ்வை மையமாக வைத்து எழுதப் பட்டது. எறும்புகளின் வாழ்வியலை ஒற்றி எழுதப்பட்ட'உணவுச் சுழற்சி' சிறுகதை, இஸ்ரேல் பாலஸ்தீன சூழலைச் சுற்றிப் பின்னப் பட்ட ' சமய விதி', நம்மை சுற்றி நிகழும் இறப்புகள் நம் மேல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய 'இறந்த காலங்கள்’, 'சுழற்சிக் கதை’ எனப் பல வகைகளாலான சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இயற்பெயர் எஸ். ரமேஷ் கிருஷ்ணன். சென்னையில் கணிணி துறை தனியார் நிறுவனத்தில் பணி. மெல்லிசையிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சில சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. ஒரு இடைவெளிக்குப் பின் முகநூல் மற்றும் இணையம் மூலம் வாசகர்களைச் சென்றடையும் வசதியால் ஆர்வமுற்று மீண்டும் படைப்புகளை பகிர்ந்து வருகிறார். மேலாண்மை மற்றும் உளவியல் சார்ந்து தமிழில் எழுதிய இவரது கட்டுரைகள் வாசகர்களால் பாராட்டப் பெற்றன. இவற்றின் தொகுப்பு "ஜோஹாரி ஜன்னல்" எனும் தலைப்பில் புஸ்தகா நிறுவனம் மூலம் மின்னூலாக வெளி வந்துள்ளது. இவரது சிறுகதைகள் பலவும் முகநூலில் வெளியாகி பாராட்டுகளும் பரிசும் பெற்றுள்ளன.
Author Name
S. Ramesh KrishnaReturn and Refund Policy
a. Items are non refundable and cannot be cancelled once order is placed.