top of page
Munnai Itta Thee

Munnai Itta Thee

SKU: SP16025
₹150.00 Regular Price
₹147.00Sale Price
Sales Tax Included

உங்களுக்குப் பேய், பிசாசு, ஆவி, பூதங்கள் போன்ற அமானுட விஷயங்களில் நம்பிக்கை இருக்கிறதா? எனக்கு இருக்கிறது - இந்தக் கதையை எழுதி முடிக்கும் வரையிலும். என்னைப் போலவே நீங்களும் நம்பி விடுங்கள் இவையெல்லாம் இருப்பதாக – அப்போதுதான் நாவல் இன்னும் விறுவிறுப்பாக, மொறுமொறுப்பாக இருக்கும்.

சினிமா நடிகர் நடிகைகள் பேட்டி தந்தால், ‘நான் நடிக்க வந்ததே ஒரு விபத்து’ என்று சொல்வார்கள். உண்மையிலேயே அந்த வார்த்தையைச் சொல்வதற்குத் தகுதியானவர் பாலகணேஷ்தான். பத்திரிகை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்தவர், 2011ம் ஆண்டு பத்திரிகைத் தேவைக்காகச் சில சிறுகதைகளும், குறுங்கட்டுரைகளும் எழுத, அவற்றுக்குப் பாராட்டுகளும் கிடைக்க, பகுதிநேரமாக எழுத ஆரம்பித்தார். இப்போது எழுதுவது முழு நேரமாகவும் வடிவமைப்பதை பகுதி நேரமாகவும் செய்து கொண்டிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இன்ன விதமாகத்தான் கதை எழுத இவரால் முடியும் என்று முத்திரை குத்தப்படாமல் எல்லா வகையிலும் எழுதிக் குவிக்க வேண்டும் என்பது இவரது பெருவிருப்பம்.

  • Author Name

    Balaganesh
  • Return and Refund Policy

    a. Items are non refundable and cannot be cancelled once order is placed.
  • ISBN

    9789354901645
bottom of page