Koondalum, meesaiyum
நங்கை சுவேதாவின், ’கூந்தலும் மீசையும்’ எனும் இந்தக் கவிதைத் தொகுப்பு, காதலின் சன்னதியில், ஒரு அழகியல் விளக்காக ஏற்றப்பட்டிருக்கிறது.
சுவேதாவின் இதயத் துடிப்பை அவரது கவிதைகள் இனிதாய், இளமையாய், எதிரொலிக்கின்றன. தனக்குள் ஊறிய அன்பின்உணர்வுளைத்தான் அவர், ஈரம் சொட்டும் காதல் கவிதைகளாக மலர வைத்திருக்கிறார்.
‘கூந்தலும் மீசையும்’ சுவேதா சுதாகரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. நீண்ட வருடங்கள் கழித்து சமீபத்தில் இவருள் ஏற்பட்ட, காமம், அன்பு, ஊடல் பாசம், பிரிவு, உறவு, தோற்றம் இவை அத்தனையும் வெளிப்படுத்தும் நூல் இது. காதல் ஆணுக்கும், பெண்ணிற்கும் மட்டும் அல்ல திருநங்கையான தனக்கும் இன்றளவும் புனிதம்தானே என்பதை சொல்லும் விதமாக இந்த ‘கூந்தலும் மீசையும்’ இன்னும் இருக்கிறது. இவர் மிக சிறந்த சமூக சேவகி. கொரோனா சமயத்தில் இவர் ஆற்றிய பணி அளப்பரியது. இவர் Born to Win அமைப்பின் நிறுவனர்.
Author Name
SwethaReturn and Refund Policy
a. Items are non refundable and cannot be cancelled once order is placed.