top of page
Ulaga Cinema 7 - Dust Jacket

Ulaga Cinema 7 - Dust Jacket

SKU: DJAG151476
₹350.00Price
Sales Tax Included
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அதுவே, இந்த முயற்சிக்கான மூலகாரணம். இந்த கட்டுரைகள் அத்தனையையும் ஒருவர் படித்து விட்டாரென்றால், நிச்சயம் உலகத்தை மயில் வாகனம் இல்லாமலேயே சுற்றி வந்து விட்ட உணர்வை ஏய்துவார் என்பது திண்ணம். அத்தனை சுவாரஸ்யங்கள் இதற்குள் பொதிந்து இருக்கின்றன. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது கப்பலில், விமானத்தில், உலக நாடுகளுக்கு போய் பணம் ஈட்டுவது மட்டுமல்ல, கப்பலோ, விமானமோ ஏறாமலே, இருந்த இடத்திலிருந்தே, கொஞ்சம் நேசிப்போடு உலக சினிமாவை தேடினால், திரை மகள் நம்மை தேடி வருவாள். புதுச்செல்வம் தருவாள். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல. கலைமகள் தருகிற அறிவுச் செல்வமும் செல்வம் தான். அதை திரைகடல் தாண்டி இருக்கிற அத்தனை உலக நாடுகளின் திரைக்காவியங்களை இந்த உலக சினிமா புத்தகங்களின் வாயிலாக தரிசிக்க இருக்கிறீர்கள். அந்த அனுபவம், நம்மை திரும்ப திரும்ப அதை நினைத்து, பரவசிப்பில் ஆழ்த்தக்கூடிய வல்லமை கொண்டது.

Recommendation: பாரீசில் சினிமா தோன்றிய காலகட்டத்தில் அது எப்படி இதர கலைகளிலிருந்து உந்துதல் பெற்றதோ, அதே உந்துதலை கவிதையும் அதனிடமிருந்து பெற்றது. அத்தகைய கவிதைகளை சினேபோயட்ரி என்று அழைக்கிறார்கள். அந்த வகையிலே சினிமாவிலிருந்து உதித்துள்ள குலசேகரின் எழுத்தை சினேலிட்டரேச்சர்  எனலாம். அதன் முக்கியத்துவம் முழுமையடைந்த ஒரு சினிமாவின் திரைமொழியை, அதன் தாக்கத்தை இலக்கியமாக வடிப்பது. அது தேர்ந்த இயக்குனரின் கையில் ஒரு திரைக்கதையானது அடையும் மாறுதலின் ரசவாதத்தை மொழியின் மூலம் கோடிட்டுக் காட்டி கவிதையாக வடிப்பது. பிரதியிலிருந்து சினிமாவாக பரிணமித்து மீண்டும் பிரதியாக உருக்கொண்டுள்ள திரைக்கலைஞர் குலசேகரின் சினிமா பற்றிய தியானிப்புகள் தமிழுக்கு புதிது. உலக சினிமா பற்றிய அவதானிப்புகளை நாம் அணுக்கமாக வாசிக்க வேண்டிய கவிதைகளாக அதனை வடித்திருப்பது குலசேகருடைய எழுத்தின் சிறப்பு.

இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரன்
(திரைப்படத்துறை / பேராசிரியர் / மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டி)
  • Author Name

    Kulasekar
  • Terms and Conditions

    All items are non returnable and non refundable
  • Language

    Tamil
bottom of page